பொங்கல் வெளியீடான "ஆயிரத்தில் ஒருவன்" படத்தை இன்று பார்த்தேன்.
மூன்று வருடமாக இந்த படத்தில் தனது உழைப்பை கொட்டி இருக்கிறாரே செல்வராகவன் அப்படி என்ன தான் இருக்கிறது இந்த படத்தில் என்ற மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றேன்.
எதிர்"பார்ப்பு" வீணாகாது என நம்பி போன எனக்கு வைத்தார்கள் "ஆப்பு" !
ஏதோ சோழர் காலத்து கதையாதம். அந்த கதைக்கும் உண்மையான சோழர் காலத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒரு மறுப்பு வேறு. எதையோ தேடி ரீமா சென், ஆண்ட்ரியா, கார்த்திக் செல்கிறார்கள். ஆயிரத்தில் ஒருவன் என்று டைட்டில் வைத்ததால் என்னவோ எடுத்த உடன் கப்பலில் பயணிக்கிறார்கள். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் "அதோ அந்த பறவை" பாடலை மீண்டும் முழுசாக MGR யையும் கார்த்திகையும் மாறி மாறி காட்டி கடுப்பு ஏத்துகிறார்கள்.
அடுத்த சில நேரங்களில் "ஈசா" பாடல் வேறு. இந்த பாடல் முடிவுற்றதும் செல்வராகவன் ஆகி போகிறார் "லூசா".
சோனியா அகர்வாலை விட்டு பிரிந்த நேரம் அது என்று நினைக்கிறேன். அதன் பிறகு அவர் கதையில் என்ன சொல்ல வருகிறார் என்று அவருக்கு தான் வெளிச்சம். அட்லீஸ்ட் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கலாம். படம் முழுவதும் ஒரே கும் இருட்டு.
சோழர்கள் வாழ்ந்த இடத்தை கஷ்டப்பட்டு கண்டு பிடித்து சேர்ந்ததும் ரீமா சென்னும், ஆண்ட்ரியாவும், கார்த்திக்கும் கும்மாளம் அடிக்கும் பாட்டு " உன் மேல ஆசை தான்" . பாடலை பார்க்கும்போதே "என் மேலே எனக்கு கடுப்பு தான்" வருகிறது. அதன் பிறகு என்னால் உட்கார முடியவில்லை.
வித்தியாசமான படத்தை தருகிறேன் என்ற பெயரில் "கார்த்திக்" உடைய மூன்று வருட திரை உலக வாழ்க்கையை வீண் அடித்து இருக்கிறார் செல்வராகவன்.
ரீமா சென் இனிமேல் தன்னுடைய பெயரை "டிராமா" சென் என்று மாற்றிக்கொள்ளலாம். படம் முழுவதும் ஓவரா "சீன்" காட்டுது ! நடுவில் வெட்டுவேன் , குட்டுவேன் என்று சோழர் பாஷை வேறு பேசுகிறார்.
"ஆண்ட்ரியா" பற்றி சொல்லனும்னா - அட "சும்மா இருய்யா" ! நான் ரொம்ப கடுப்பில் இருக்கேன் !!
பாதி படம் வரை இழுவையாக கொண்டு சென்ற செல்வராகவன் அடுத்த பாதியில் மீதி கதையை என்ன செய்வது என்று தெரியாமல் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி இருக்கிறார்.
வழக்கமாக comedy செய்யும் பார்த்திபன். இந்த முறை serious ஆக வருகிறார். அவர் போட்டிருக்கும் costumes comedy ஆக இருக்கிறது !
GV பிரகாஷ் "Hollywood" range-இல் பயமுறுத்துகிறார். பயம் தான் வரவில்லை. ஓவர் சப்தம் என் காதை கிழித்து தான் மிச்சம் !
மெனக்கெட்டு செட்டு போட்ட ART director & Photography பாராட்ட பட வேண்டியவர்கள்.
செல்வராகவனுக்கு என்ன ஆயிற்று ? காதல் கொண்டேன் படத்தில் நம்மை மிரட்டிய செல்வராகவன் இந்த படத்தில் தானே மிரண்டு போயி இருப்பது வெளிச்சத்துக்கு வருகிறது. செல்வராகவன் சரக்கு அவ்வளவு தானா என்று சந்தேகிக்க வைக்கிறது !
இவர் மூன்று வருடமாக படம் எடுத்து, என் வாழ்க்கையின் மிக முக்கிய மூன்று மணி நேரத்தை வீணடித்து இருக்கிறார் !
சோழர் பயணம் தொடரும் என்று டைட்டில் ஓடு படம் முடிகிறது !
இந்த மாதிரி படம் எடுத்தால்
செல்வராகவன் பயணம் தொடராது - அது நிச்சயம்
இந்த படத்தை திருட்டு VCD கிடைத்தால் கூட வாங்கி பார்க்க வேண்டாம் என்று மிக பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் !
Vivek's Punchline :
ஆயிரத்தில் ஒருவன் - கடுப்பில் இவன்
ஒரு வாரம் ஓட மாட்டான் ஒருவன்
4 comments:
Simply Waste review.. go nd watch English movies alone..
Hi vivek , nee vijay rasigana , ayirathil oruvan katha unakku puriyalana , yar kitayavathu kelu, its a good try in indian cinema..
Hi prince, naan thalaivar rajini rasigar mattum thaan. chinna thala-pathy rasigan illa. Thank you for visiting my blog and leaving your comments. You are right. Its a good try in Indian cinema but definitely not at the cost of my hard earned money. I spend money on movies to get entertained and definitely not to get pained :-)
Shalom
I just wanted to say hi :)
Post a Comment