Friday, August 29, 2014

IRUMBU KUTHIRAI - MOVIE REVIEW


என் இனிய BLOG  வாசிகளே, 

Me returning to my Blog after a long Time. I think whenever it is required, I should appear and save my people.

Saw this "Irumbu Kuthirai" second show of its release. Just for Adharva !!

அதர்வா உடன் ஆசையுடன் குதிரை சவாரி செய்யலாம் என்று பார்த்தால், ஒரு குதிரையையும் காணவில்லை. அதாவது கதையை காணவில்லை. ஒரு வேளை பார்த்திபன் படம் பார்க்க வந்து விட்டேனா என்று கூட எனக்கு சந்தேகம் வந்து விட்டது. பார்த்திபன் சார் நீங்க தயவு செய்து இன்னொரு முறை கதையே இல்லாமல் படம் இது என்று விளம்பரம் செய்யாதீர்கள். உங்களை பார்த்து பல பேர்  காப்பி அடித்து இரும்பு குதிரை மாதிரி படங்கள் வெளி வருகின்றன. 

படத்தின் கதை 

எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.

அதர்வா 

இந்த படத்தில் வில்லனோடு சண்டை போட்டதை தவிர அவர் என்ன பண்ணுகிறார் என்று அவருக்கே தெரியவில்லை. அதர்வா இனி கதை தேர்வில் கவனம் செலுத்துவது நல்லது. இல்லை என்றால் விரைவில் காணமல் போய் விடுவார். 

பிரியா ஆனந்த் 

இந்த பெண்  எப்பொழுது பார்த்தாலும் சிக்கன உடை, பணக்கார தோரனை உடன் பல படத்தில் சுத்தி விட்டு போகும். இந்த படம் இந்த பெண்ணுக்கு அது மாதிரி  இன்னொரு படம். பாலா போன்ற இயக்குனர்கள் இந்த பெண்ணை தத்தெடுத்து பிதாமகன் போன்ற கதை அம்சம் உள்ள படத்தில் நடிக்க வைத்து, சேற்றில் புரட்டி எடுத்து, பிச்சகாரி வேஷத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று என்னுடைய நீண்ட நாள் ஆசை. அப்பொழுது தான் இந்த பெண் திருந்தும். 

G,V,பிரகாஷ் 

இந்த படம் G .V .பிரகாஷ் MUSICAL ஆம். இது G .V .பிரகாஷ் YOSICAL (a ) படம். TUNE  போடவே யோசிக்கவில்லை அவர். மிக மிக மட்டமான பாடல்கள் கொண்ட படம் இது. யோசிக்காம tune போட்டதால இந்த படம் G .V .பிரகாஷ் YOSICAL  படம்.


டைரக்டர் BOSE 

இந்த BOSE மாதிரி டைரக்டர்கள், மேன் மேலும் வளர விடாமல் CLOSE செய்வது நல்லது. 


VIVEKZ  பார்வை

எவ்வளவோ கஷ்டப்பட்டு படம் எடுககிறோம். BLOG என்ற பெயரில் மார்க் போடுவது, ஸ்டார் போடுவ்து, படம் குப்பை என்று விமர்சனம் செய்கிறார்கள் என்று புலம்பும் டைரக்டர்களே, எங்கள் பொன்னான நேரத்தை வீண் அடித்து, பல பேரை ஏமாற்றி, அதிகமான விலை கொடுத்து டிக்கெட் எடுத்து படத்தை பார்க்க வந்தால், இந்த மாதிரி மட்டமான ஒரு படத்தை கொடுத்து எங்களை சாகடிக்காதீர்கள். கதையை நம்பி மட்டும் படம் எடுங்கள். கல்பாத்தி அகோரம் theatre இல் கூட இந்த படம் ஒரு வாரம் தாங்காது. 

இந்த படத்தை நீங்கள் பார்பதற்கு பதில் "அஞ்சான்" படத்தை அஞ்சாறு முறை பாருங்கள். அஞ்சான் எவ்வளவோ மேல் என்பீர்கள். இந்த படத்தை நீங்கள் பார்பதற்கு "இரும்பு" இதயம் வேண்டும். இரும்பு குதிரை பதில் கடுப்பு கழுதை என்று தலைப்பு படத்திற்கு மிக பொருந்தும். 

VIVEKZ  PUNCH 

இரும்பு குதிரை - கடுப்பு கழுதை