Sunday, November 27, 2011

மயக்கம் என்ன - விமர்சனம்



Hi Guyz,

Back after a long time. Watched this Movie in Giant Screen !

Lot of hype for this Danush's movie. But did the movie withstand the hype?

Million dollar question.

மயக்கம் என்ன பாடல்கள் ஹிட் ஆனது இந்த படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து விட்டது.

ஒரு புகைப்படக்காரரின் கனவை நிஜமாக்கிற கதை. தனுஷிற்கு அழகாக பொருந்துகிறது.

"ஓட ஓட" பாடலும், காதல் என் காதல், இந்த இரண்டு சூப்பர் ஹிட் பாடல்கள் படத்தின் முதல் பாதியை தாங்கி பிடிக்கிறது.

இரண்டாவது பாதி நாம எப்போ தியேட்டரை விட்டு "ஓட"ப் போகிறோம் என்ற அளவிற்கு உள்ளது.

செல்வராகவனிடம் இனி "சரக்கு" இல்லை என்று யாரும் சொல்ல முடியாது.

படத்தில் ஆளாளுக்கு "சரக்கு" அடிக்கிறார்கள்.

"முண்ட களப்ப" என்று தூய தமிழில் திட்டிக்கொள்கிறார்கள்.

கதாநாயகி சொல்லவே தேவை இல்லை. காதலிக்க ஒருத்தரும், கட்டிபிடிப்பது இன்னொருத்தரும் என்று நல்ல கொள்கை உடைய நாயகி. பார்க்க மொழுக் மொழுகேன்று இருக்கிறார். கடைசி காட்சியில் மின்னுகிறார்.

GV பிரகாஷிடம் உள்ள எல்லா வயலின்களையும் யாரவது ஒளித்து வைத்தால் நன்றாக இருக்கும். தெய்வ திருமகள் ரீ-ரெகார்டிங் கேட்ட மாதிரியே ஒரு உணர்வு.

Selvaragavanin காதல் கொண்டேன் படத்தில் உள்ள விறுவிறுப்பு அடுத்த அவர் டைரக்ட் செய்த எந்த படத்திலும் இல்லை.

செல்வராகவனுக்கு இனி தேவை விறுவிறுப்பும் சுறுசுறுப்பும்.

இந்த படம் கண்டிப்பாக தனுஷ் ரசிகர்களுக்கு மட்டும்.


Vivek'z Paarvai: * * இரண்டு ஸ்டார்ஸ் - GV. பிரகாஷிற்கும், தனுஷிற்கும்

முதல் பாதி - மயக்கம்

இரண்டாவது பாதி - (நல்ல) உறக்கம்

மயக்கம் என்ன ? படத்தோட பெயர்

இது சுமார் படம்

இதை சொல்ல எனக்கு

தயக்கம் என்ன ?

No comments: