உன்னிடம் சேர்க்கும்படி
அனுப்பபட்ட தபால் நான்.
எனக்குள் என்ன இருக்கிறது
என்பதை நீ தான்
பி ரி த் து ப் பார்க்க வேண்டும் !
===
உனக்கும் எனக்கும் இடையே
கொஞ்சம் இடைவெளி விட்டு
நான்அமர்வதற்குக் காரணம்
நீ என்னை தொட்டு விட கூடாது
என்பதற்காக அல்ல
நம்மிடையே
காதல் அமர வேண்டும்
என்பதற்காக தான்.
===
தினமும் உனக்கு முன்னரே
நான்எழுந்து
வேலை செய்ய ஆரம்பித்து விட்டாலும்
உன்னை நான் எழுப்பும்போது தான்
என்னையும் எழுப்பி கொள்கிறேன்
===
நான்
கண்ணை மூடி
கடவுளை வணங்கும்போது
என் கண்ணுக்குள்
நீ தெரிகிறாயே
இது தான்
கணவனே
கண் கண்ட தெய்வம்
என்பதா ?
===
நான் சமைத்த பாவக்காயை
நீ விரும்பி சாப்பிடும்போது
பாவக்காய்
புண்ணியக்காய்
ஆகிவிடுகிறது!
===
No comments:
Post a Comment