சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை டி.வி.யில் ரசித்து வந்த தமிழ் ரசிகர்களுக்கு, அடுத்த தெருவில் விளையாடும் விடலைகளின் சுவாரஸ்ய வாழ்க்கையை 'சென்னை 600028' மூலம் காட்டியவர், இயக்குனர் வெங்கட்பிரபு. அனைவருக்கும் தெரிந்த கதைக்களத்தை தனக்கே உரிய பாணியில் சொன்ன இவர், அடுத்து 'சரோஜா' பட வேலைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மூன்று வெவ்வேறு இடங்களில் நடக்கும் கிளைக்கதைகள், விபத்தாய் ஒன்றாக இணைகிற இடம்தான், படத்தின் கதை! முந்தைய படத்தின் பாதிப்பு சிறிதளவும் இல்லாமல் தயாராகும் இப்படத்தில், 'சரோஜா' பாத்திரத்தில் மும்பை மாடலும், தியேட்டர் ஆர்ட்டிஸ்டுமான வேகா நடிக்கிறார். ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்து, தமிழில் நாயகியாக அறிமுகமாகும் இவர், மும்பையில் உள்ள 'பிராட்வே' என்ற நாடக்குழுவில் அனுபவம் பெற்றவர்.
இப்படத்தில் எஸ்.பி.சரண், பிரேம்ஜி, 'சென்னை 28' சிவா, சுமந்த், சம்பத் உள்ளிட்டோரும், முக்கிய பாத்திரங்களில் ஜெயராம் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோரும் நடிக்கின்றனர். 'சின்ன மாப்ளே', 'அரவிந்தன்', 'ராசய்யா' போன்ற படங்களைத் தயாரித்த டி.சிவாவின் அம்மா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் 'சரோஜா'வை டிசம்பர் 7-ம் தேதி முதல் படமாக்குகிறார்கள்!
படக்குழுகலை : வித்தேஷ்
சண்டைப்பயிற்சி : செல்வம்
நடனம் : கல்யாண்
நிர்வாக தயாரிப்பாளர்கள் : கிருஷ்ணமூர்த்தி - நாகேந்திரன்
தயாரிப்பு மேற்பார்வை : மகேந்திரன்
தயாரிப்பு : எஸ்.அருணா மகேஸ்வரி
ஒளிப்பதிவு : சக்தி சரவணன்
படத்தொகுப்பு : பிரவின் ஸ்ரீகாந்த்
இசை : யுவன் சங்கர் ராஜா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : வெங்கட்பிரபு

No comments:
Post a Comment