Friday, February 22, 2008

முனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு'

முனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு' என்ற வித்தியாசமான தலைப்புடன் மீண்டும் களமிறங்கியுள்ளது திருமுருகனின் 'என் மகன்' டீம். முந்தைய படத்தில் பணியாற்றிய திருமுருகன், பாஸ்கர் சக்தி, பரத், வடிவேலு, வித்யாசாகர் கூட்டணியே இதிலும் இணைந்துள்ளது.

கிராமத்துப் பள்ளிக்கூடம் ரேஞ்சில் இருக்கும் கலைக்கல்லூரியில் படிக்கிறார் பரத். அவரது அப்பா பொன்வண்ணன். ஒரு காதலுக்கு முதல் மகன் பலியாகிவிட, பரத்திற்கு காதல் வராமல் பார்த்துக் கொள்கிறார். ஆனால், யாரை விட்டது காதல். அந்த ஊருக்கு வரும் நாயகி பூர்ணா பரத்துக்கு காதல் வலை விரித்து, பொன் வண்ணனின் எண்ணத்தில் மண் அள்ளி போடுகிறார். அதன் பின் நடப்பது என்ன?. பரத்தின் காதலா, பொன் வண்ணனின் கோபமா என்பது க்ளைமாக்ஸ்.

'மொத்தத்தில் ரசிகர்களை திருப்தி படுத்தும் ஆக்சன், லவ், சென்டிமெண்ட் எல்லாம் கலந்த கலவை இந்த படம்' என்றார் திருமுருகன்.பரத்தின் அம்மாவாக தாரா சென்டிமெண்டில் உருக வைக்க, காதலியாக வரும் புதுமுகம் பூர்ணா இளைஞர்களை காதலில் உருக வைப்பார். 'சங்கர் குரு' இயக்குனர் ராஜாவும், எஸ்.ஐ.பாபுவும் வில்லனாக வந்து மிரட்டுகின்றனர்.

கல்லூரி அட்டெண்டராக வரும் வடிவேலு, 'பார்ட் டைம் ஜாப்' ஆக இளம் பெண்களுக்கு பேய் ஓட்டுகிறார். படத்தில் இவருக்கு ஒரு பாடலும் இருக்கிறது. ஒவ்வொரு பெண்களிடம் அல்லது பேய்களிடமும் சிக்கிகொண்டு இவர் படும்பாடு வயிற்றை பதம் பார்க்கும். 'இந்திரலோகத்தில் நா.அழகப்பனி'ல் கோட்டைவிட்ட காமெடி இமேஜை, வடிவேலு மீண்டும் இதில் தக்கவைப்பார்' என்கின்றனர். பூபதியின் கை வண்ணத்தில் இடம்பெறும் அரங்க அமைப்புகளை வெகு நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறது வைத்தியின் காமிரா. லோட்டஸ் பைவ் ஸ்டார் மற்றும் திரு பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு பாஸ்கர் சக்தி வசனம் எழுத, திருமுருகன் இயக்குகிறார்.

No comments: