பள்ளிக்கூடம் தொடங்குவது, டிவி ஆரம்பிப்பது புது சிம் கார்டு வாங்குவது போல ஆகிவிட்டது.
இதோ இன்னொரு தொலைகாட்சி.
கேப்டன் விஜயகாந்த் ஒரு டிவி சேனல் தொடங்குகிறார். அநேகம் "கேப்டன் டிவி" என்று பெயரிடலாம். பத்தாத குறைக்கு வார பத்திரிக்கை வேறு. இனி கேப்டன் படங்களை கேட்பாரற்று கேப்டன் டிவியில் கண்டு களியுங்கள்.
கட்சிக்கு ஒரு கொடி போல கட்சிக்கு ஒரு டிவி ஆகி போச்சி.
DMK - கலைஞர் TV
AIADMK - ஜெயா TV
PMK - மக்கள் TV
காங்கிரஸ் - மெகா டிவி - கே.வி.தங்கபாலு, வசந்த் டிவி - வசந்த் குமார்
இதெல்லாம் பார்க்க தமிழ்நாட்டுல இலவச டிவி வேற.
கண் கொள்ளா காட்சி!
No comments:
Post a Comment