சிவாஜி பிரொடக்க்ஷன் 45 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியில் தயாரித்து வெளி வரும் படம் "டெல்லி ஐட்ஸ்". 1958 இல் வெளியான "அமர் தீப்" படத்திற்கு பிறகு இந்த இந்தி படத்தை தயாரித்து உள்ளனர். இந்த படத்தை எழுதி இயக்கி இருப்பவர் ஆனந்த் குமார். ஜிம்மி ஷெர்கில், நேகா தூபியா, ஓம் புரி நடித்துள்ளனர். நடிகர் மாதவன் இந்த படத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்து அசத்தியுள்ளார். "புல்லாகே ஜானா" என்ற பாடலின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற "ரப்பி ஷ்ர்கில்" முதல் முறையாக ஒரு முழு படத்திற்கு இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தயாரித்ததின் மூலம் இந்தி உலகில் ஒரு புது வாழ்வு கிடைக்கும் என்று தயாரிப்பாளர்கள் பிரபுவும், ராம்குமாரும் கருதுகின்றனர்.
No comments:
Post a Comment