ஏ.வி எம். தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் "சிவாஜி" படத்தை தமிழகத்தில் உள்ள ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி அமெரிக்கா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள ரஜினி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அந்த ஆவலை மேலும் தூண்டும் விதமாக அவ்வப்போது சிவாஜியைப் பற்றிய தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. 'சிவாஜி'யின் கதை!வெளிநாட்டில் வசிக்கும் செல்வந்தர் ஆன அப்பா ரஜினி, மகன் ரஜினியை தாய் நாடு சென்று கல்வி சேவையாற்றும்படி உத்தரவிடுகிறார். அதன்படி, தமிழகம் வரும் ரஜினி பல கல்வி நிறுவங்களை நிறுவி ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கிறார். இதனால், ரஜினியின் செல்வாக்கு உயர்கிறது.கல்வி நிறுவங்கள் மூலம் கொள்ளைடிக்கும் அரசியல்வாதிகள், ரஜினியின் வளர்ச்சியை கண்டு பயப்படுகின்றனர். இதனால், அவர்கள், ரஜினி மீது வீண்பழி சுமத்தி ரஜினியை ஜெயிலுக்கு அனுப்புகின்றனர். மேலும் ரஜினியின் சொத்துக்களை எல்லாம் அவர்கள் பறிமுதல் செய்துவிடுகின்றனர்.
ஜெயிலில் இருந்து வெளியே வரும் ரஜினி கையில், ஒரே ஒரு ரூபாய் நாணயம் மட்டும் உள்ள்து. இதை வைத்துக்கொண்டு தன்னம்பிக்கையோடு போராடி மீண்டும் பழைய நிலைக்கு வருகிறார். மேலும் தன் மீது வீண் பழி சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பிய அரசியல்வாதிகளை அவர் பழி வாங்குகிறார். இதுதான் சிவாஜி படத்தின் கதைக் கரு.
'சிவாஜி'யின் சிறப்புகள் கடந்த 30 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில், ரஜினி எந்தவொரு படத்திலும் ஒரு வருடம் நடித்தாக சரித்திரம் இல்லை. ஆனால் சிவாஜி படத்தில் ஒராண்டுக்கு மேல் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினி பல தோற்றங்களில் வந்து கலக்குகிறார். மேலும், சண்டை காட்சிகளில் இளைய தலைமுறைக்கு சவால் விடும் வகையில் நடித்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ரஜினிக்கு ஜோடியாக முதன் முறையாக இப்படத்தில் ஸ்ரேயா நடிக்கிறார். தமிழில் இவருக்கு மவுசு இல்லையென்றாலும் இப்படத்தின் மூலம் மார்க்கெட் நிச்சயமாக உயரும். படம் முழுவது ரஜினியுடன் வந்து காமெடியில் கலக்கி இருக்கிறாராம் விவேக்
நீண்ட இடைவேளிக்குப் பிறகு, சுமன் இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். மல்லிகா ஷெராவத்,நயன் தாரா ஆகியோர் தலா ஒரு பாடலுக்கு நடனம் ஆடிவிட்டு செல்கினறனர்.ரஜினியை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்ற எண்ணம் ஷங்கருக்கு இருந்தது. ஆனால் அதற்கான சூழல் இப்போதுதான் உருவாகியுள்ளது. சென்னை, பெங்களூர் மற்றும் வெளிநாடுகளில் சிவாஜி படக்காட்சிகளை படமாக்கியுள்ளார்.
சென்னை பின்னி மில்லிலும், ஹைதரபாத் பிலிம் சிட்டியிலும் லட்ச கணக்கான ரூபாய் செலவில் செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சிகளை படமாக்கியுள்ளார். குறிப்பாக, ரஜினியை சென்னையில் உள்ள மூளை முடுக்குகளில் எல்லாம் நடக்க விட்டிருக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் இப்படத்தில் 5 பாடல்கள் இடம் பெருகின்றன. ஐந்து பாடல்களையும் வெவ்வேறு விதவிதமாக ட்டுயூன்களில் கொடுத்திருக்கிறார்.பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகும் என்றும், இதன் மூலம் மீண்டும் தமிழில் முதல் இடத்தை பிடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கே.வி.ஆனந்தின் கேமிரா ரஜினியை மிகவும் இளமையாக கட்டிருக்கிறதாம்.ரஜினி படம் என்றாலே பஞ்ச் வசனங்களுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில், சுஜாதா வசனங்களை பின்னி எடுத்திருக்கிறாராம். பாடல் வரிகள் வைரமுத்து, சண்டை காட்சிகளை பீட்டர் ஹெய்ன்ஸ் அமைத்துள்ளார். ராஜு சுந்தரம். லாரன்ஸ ஆகியோர் ரஜினியை ஆட்டம் போட வைத்துள்ளனர்.
மாபெரும் வெற்றி படமான சந்திரமுகிக்கு பிறகு சிவாஜி படம் வெளிவருவதால், ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களிடையும் இப்படம் அதிக எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

No comments:
Post a Comment