Monday, April 30, 2007

Kavithai Korner

En natpu vattarangaLil kavithai mazhai pozhiyavalla thiramaisaaligaL silar irukindranar. AvargaL thangaLudaya kavithai thogupinai, intha blog comments sectionil aruvi maathiri kottuvaargaL.

En pangiRku, sila kavithaigaL suttum (naan suttum vizhi sudar), sila kavithaigaL en mooLaiyai kasakkiyum, ungal paarvaikku vaikkiraen.

VaarungaL Kavithai Kornerku.

Indha comments sectionil varum anaithu kavithaigaLum, Kavithai Kornerin Thoguppu endra thalaippil, avvappothu, update seiyyappadum.

18 comments:

Vivek said...

அழகான பெண்களுக்கெல்லாம்
திமிர் இருக்கும்
என்றாலும்
உனக்கிருக்கும்
அழகே உன்
திமிர் தான்

Anonymous said...

விதியை மதியால்
வெல்ல முடியாவிட்டாலும்
சிரிப்பால் வெல்கிறேன்

என்னை போய் பைத்தியம்
என்கிறார்கள்

Unknown said...

இதோ
என் இதய
ரேகையினைத் தருகிறேன்

இவ்வுலகம்
என்னை விட்டு
தொலைவில்
சென்றுவிட்டது போல்
உணர்வு

கடைசி நாட்களில்
காலத்திற்கு
என்மீது கருணை

ஒவ்வொரு நிமிடமும்
என்னோடு உறவாட
பலரை முளைக்கச் செய்கிறது

கடவுளுக்கு ஒரு
சின்ன வேண்டுகோள்
வாழ்வதும் சாவதும்
ஒருமுறைதான்

அவரவர் விதியை
அவரே எழுதுகோல்
கொண்டு
எழுத விடு
இறைவா!!!

Unknown said...

ஹைகூ

கண்ணை மூடியது
தெரியும்
மனம் தூங்கியது எப்போது

Vivek said...

தவறு செய்கிற நேரங்களைத் தவிர
மீதி எல்லா நேரங்களிலும் நல்லவன் நான்.

அன்புடன் விவேக்!

Vivek said...

என்றும் நான் சொல்லும் பொய்களில் வளர்கிறது
என் சிந்தனை !

Vivek said...

உன் வீடு காலி செய்ய போகிறாய் என்று நான் கேள்விப்பட்டதும்
இடிந்து போனது என் மனக் கூடு.

Vivek said...

உன்னை நான் வாழ்க்கை துணை என்று எப்படி சொல்வது

எனக்கு வாழ்க்கை கொடுத்து கொண்டு இருப்பதே நீ தானே!

Unknown said...

ஹைக்கூ

உன்னை நேசித்தது என் தவறுதான்
என்னை யோசிக்க வைக்காதே
அதற்காக நான் யாசிக்கிறேன்
-----
நீ
இலக்கணம்
மீறிய இலக்கியம்
மட்டுமல்ல
மரபு மீறிய
புதுக்கவிதையும் கூட
-----
மனிதன்
கணிணியைக் கண்டுபிடித்தான்
கணிணியே
உன்னால்
ஒரு மனிதனைக்
கண்டுபிடிக்க முடியுமா?

Unknown said...

தவறுகள் அனைத்தையும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக
ஏற்றுக்கொண்டதாலோ என்னவோ எதைப்பற்றியும்
அச்சமும் இல்லை... வெட்கமும் இல்லை...

Vivek said...

நான் கவிதை எழுத நினைத்த உடன் கூடவே ஒரு கூக்குரலும் கேட்கிறது. Sir, Pazhaya paper!

Vivek said...

உன் புன்னகை இருக்கிறதே
மிகவும் சக்தி வாய்ந்தது
கரண்ட் இல்லாமல்
எரிந்தது
என் மனதிற்குள்
1000 வாட்ஸ் பல்பு

Vivek said...

காதலிக்கும் போது
காதலி கிடைக்கிறாள்
நான்
காதலிக்க படும்போது
மனைவி கிடைக்கிறாள்

Vivek said...

என் பிறந்த நாள்
பரிசாக தந்தாய்
அன்பாய் ஒரு
கொலுசு

நான் பிறந்ததே
உனக்காக தான்
இதை நீ எப்போது
புரிந்து கொள்வாயடா
என் செல்ல
லூசு

Vivek said...

சும்மா இருந்த என் மீது
உன் பார்வையை வீசினாய்
இரவில்
நான் போர்வையை போர்த்தும் போதெல்லாம்
என் போர்வைக்குள்
உன் நினைவு!

யாழினி said...

அவள் மூச்சுக்காற்று
உன் மூச்சுக்காற்று
அவள் இதயத்துடிப்பு
உன் இதயத்துடிப்பு
அவள் அன்பே
என்றும் மாறாத அன்பு
யார் அவள்......

அம்மா

யாழினி said...

துடிக்க மட்டுமெ
தெரிந்த என் இதயத்திற்கு
உன்னை நினைத்து தவிக்கவும்
கற்றுக் கொடுத்துவிட்டாயே...!
உன் வசமானது
உள்ளம் மட்டுமல்ல
என் உயிரும் தான்.....

யாழினி said...

கவிதை எழுதலாமென
காகிதம் எடுத்தேன்......

அம்மா பால்
அதிகாலை பால்காரரின்
குரல் கேட்டு
கண்விழிக்க
காணும் சூரியனின்
காய்க்காத கதிர்கள்

மலரத்துடிக்கும்
மல்லிகை மொட்டுகள்

பின்கொசுவம் வைத்த
கீரைக்காரப் பெண்ணின்
வசீகர குரலும், நடையும்

பெருமாள் கோவிலில் ஒலிக்கும்
அதிகாலை சுப்ரபாதத்துடன்
அல்லா கோவிலின் மணியோசை

காலடியில் விழுந்த செய்தித்தாளை
குனிந்து எடுத்து நிமிரும் முன்
மிதிவண்டியில் மாயமாய்
மறையும் சிறுவன்

மணக்க மணக்க
அம்மா கொடுக்கும் காபி

இரை தேடச் செல்லும் பறவைகளின்
காச் மூச் சத்தம்

வாழ்க்கைச் சுமையை குறைக்க
புத்தகச் சுமையை சுமக்கும் சிறுவர்கள்

அதிகாரியின் அர்ச்சனைக்குப்
பயந்த பணியாளர்களின்
அவசர நடை

பேருந்து இரைச்சிலிலும்
சன்னமாய் கசியும்
மனதுக்குப் பிடித்த பாடல் வரிகள்

விதவிதமான மனிதர்களின்
விசித்திரமான மனங்கள்

வாழ்க்கை பற்றி சற்றும்
பயப்படாத நடைபாதை மனிதனின் உறக்கம்

யாருக்காகவும் காத்திருக்க மாட்டேனென்று
கிளம்பும் சிவந்த சூரியன்

வீடு திரும்பும் மனிதர்கள்
கூடு திரும்பும் பறவைகள்

அலட்டிக்கொள்ளும் நட்ச்சத்திரக்கூட்டத்தில்
அமைதியாய் காட்சி கொடுக்கும் நிலா

அட.................

என் வாழ்நாளில் ஒருநாள்
குறைந்தே விட்டது
எதைப்பற்றிக் கவிதை
எழுதுவது என்றுதான் இன்னும்
முடிவு செய்ய
முடியவில்லை........

(படிக்கறவங்க பாவம்னு விட்றுங்கப்பா.....
அடிக்க வந்துடாதிங்க..... மனசாட்சி)