Monday, April 30, 2007

Kavithai Kornerin Thoguppu


Vivek said...
அழகான பெண்களுக்கெல்லாம்
திமிர் இருக்கும்
என்றாலும்
உனக்கிருக்கும்
அழகே
உன் திமிர் தான்
30/4/07 11:08

santhanalakshmi said...
விதியை மதியால் வெல்ல முடியாவிட்டாலும்
சிரிப்பால் வெல்கிறேன்
என்னை போய்
பைத்தியம்
என்கிறார்கள்
30/4/07 11:08

santhanalakshmi said...
இதோஎன் இதயரேகையினைத் தருகிறேன்
இவ்வுலகம்என்னை விட்டு
தொலைவில் சென்றுவிட்டது போல்
உணர்வு கடைசி நாட்களில் காலத்திற்கு என்மீது கருணை
ஒவ்வொரு நிமிடமும் என்னோடு உறவாட பலரை முளைக்கச் செய்கிறது
கடவுளுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்
வாழ்வதும் சாவதும்ஒருமுறைதான்
அவரவர் விதியை அவரே
எழுதுகோல் கொண்டு எழுத விடுஇறைவா!!!
30/4/07 15:50

santhanalakshmi said...
ஹைகூ
கண்ணை மூடியதுதெரியும்
மனம் தூங்கியது எப்போது?
30/4/07 15:57

Vivek said...
தவறு செய்கிற நேரங்களைத் தவிர மீதி
எல்லா நேரங்களிலும் நல்லவன் நான்.
அன்புடன் விவேக்!
30/4/07 16:44

Vivek said...
என்றும் நான் சொல்லும் பொய்களில்
வளர்கிறது என் சிந்தனை !
30/4/07 16:47

Vivek said...
உன் வீடு காலி செய்ய போகிறாய் என்று
நான் கேள்விப்பட்டதும்
இடிந்து போனது என் மனக் கூடு.
30/4/07 16:51

Vivek said...
உன்னை நான் வாழ்க்கை துணை என்று
எப்படி சொல்வது?
எனக்கு "வாழ்க்கை" கொடுத்து கொண்டு இருப்பதே
நீ தானே!
30/4/07 16:55

santhanalakshmi said...
ஹைக்கூ

உன்னை நேசித்தது என் தவறுதான்
என்னை யோசிக்க வைக்காதே
அதற்காக நான் யாசிக்கிறேன்-----
நீ இலக்கணம் மீறிய இலக்கியம் மட்டுமல்ல
மரபு மீறிய புதுக்கவிதையும் கூட-----
மனிதன் கணிணியைக் கண்டுபிடித்தான்
கணிணியே உன்னால்
ஒரு மனிதனைக் கண்டுபிடிக்க முடியுமா?
30/4/07 17:20

santhanalakshmi said...
தவறுகள் அனைத்தையும்
வாழ்க்கையின் ஒரு பகுதியாக
ஏற்றுக்கொண்டதாலோ என்னவோ
எதைப்பற்றியும் அச்சமும் இல்லை...
வெட்கமும் இல்லை...
30/4/07 17:27

Vivek said...
நான் கவிதை எழுத நினைத்த உடன்
கூடவே ஒரு கூக்குரலும் கேட்கிறது.
Sir, Pazhaya paper!
30/4/07 17:58


Vivek said...
உன் புன்னகை இருக்கிறதே
மிகவும் சக்தி வாய்ந்தது
கரண்ட் இல்லாமல்
எரிந்தது
என் மனதிற்குள்
1000 வாட்ஸ் பல்பு
30/4/07 23:16

Vivek said...
காதலிக்கும் போது
காதலி கிடைக்கிறாள்
நான் காதலிக்க படும்போது
மனைவி கிடைக்கிறாள்
30/4/07 23:19



Vivek said...
என் பிறந்த நாள் பரிசாக
தந்தாய்
அன்பாய் ஒரு
கொலுசு

நான் பிறந்ததே
உனக்காக தான்
இதை நீ எப்போது
புரிந்து கொள்வாயடா
என் செல்ல
லூசு
30/4/07 23:24


Vivek said...
சும்மா இருந்த என் மீது
உன் பார்வையை வீசினாய்
இரவில் நான் போர்வையை
போர்த்தும் போதெல்லாம்
என் போர்வைக்குள்
உன் நினைவு!
30/4/07 23:36

Yalini said...
அவள் மூச்சுக்காற்று
உன் மூச்சுக்காற்று
அவள் இதயத்துடிப்பு
உன் இதயத்துடிப்பு
அவள் அன்பே என்றும்
மாறாத அன்பு
யார் அவள்......
அம்மா
2/5/07 10:57

Yalini said...
துடிக்க மட்டுமெ தெரிந்த
என் இதயத்திற்கு
உன்னை நினைத்து
தவிக்கவும்
கற்றுக் கொடுத்துவிட்டாயே...!
உன் வசமானது
உள்ளம் மட்டுமல்ல
என் உயிரும் தான்.....


Yalini said...
என் ஆயுள் முழுதும்
நம் நட்பு நீடிக்க வேண்டும்
நம் நட்பு நீடிக்கும் வரை
என் ஆயுள் நீடித்தால் போதும்
10/5/07 18:53

Yalini said...
உரசிக் கொண்டது பார்வைகள்
தான் என்றாலும்
வலிப்பதென்னவோ
இதயத்தில்
10/5/07 18:55


Yalini said...
என் மதுக்கோப்பை காலியாக
உள்ளது
உன் இதழ்களின் துளிகளை
நிரப்பி வை
10/5/07 18:56

Yalini said...
தேன் எடுக்கவில்லை ஆனாலும்
கொட்டிவிட்டதுஅவள்
இதழ்களில் ஊறிய
சூடான வார்த்தைகள்
10/5/07 18:58


Yalini said...
சூடேற்றியது யார்???
கொதித்தெழுந்து பார்க்கிறது
அடுப்பிலிட்ட பால்
10/5/07 19:03

Yalini said...
ஒரே கனவை இருவரும் காண்கிறோம்
நீ உறங்கிக்கொண்டும்
நான் விழித்துக்கொண்டும்
நீ..... நான் வாங்கி வந்த சாபம்நான்......
நீ வாங்க மறுக்கும் வரம்
10/5/07 19:07

8 comments:

யாழினி said...

என் ஆயுள் முழுதும் நம் நட்பு நீடிக்க வேண்டும்
நம் நட்பு நீடிக்கும் வரை என் ஆயுள் நீடித்தால் போதும்

யாழினி said...

உரசிக் கொண்டது பார்வைகள் தான் என்றாலும்
வலிப்பதென்னவோ இதயத்தில்

யாழினி said...

என் மதுக்கோப்பை காலியாக உள்ளது
உன் இதழ்களின் துளிகளை நிரப்பி வை

யாழினி said...

தேன் எடுக்கவில்லை ஆனாலும் கொட்டிவிட்டது
அவள் இதழ்களில் ஊறிய சூடான வார்த்தைகள்

யாழினி said...

சூடேற்றியது யார்???
கொதித்தெழுந்து பார்க்கிறது
அடுப்பிலிட்ட பால்

யாழினி said...

ஒரே கனவை இருவரும் காண்கிறோம்
நீ உறங்கிக்கொண்டும்
நான் விழித்துக்கொண்டும்
நீ..... நான் வாங்கி வந்த சாபம்
நான்...... நீ வாங்க மறுக்கும் வரம்

யாழினி said...

நானும் ரோஜா செடியும் ஒன்றுதான்
சந்தோஷமாய் மலரும் மலர்களைவிட
சோகமாய் மலரும் முட்களே அதிகம்

யாழினி said...

கவிதைகளுக்குள் என்னை
ஒளித்து வைப்பேன்!
காதல் படங்களில்
இதயம் தொலைப்பினும்
கண்டுகொள்ளாமல் விலகிப்போவேன்!
காதில் விழுந்த காதல் வரிக்கு
முகம் சுளித்து விலகிக்கொள்வேன்!
நீ வருகையில் கண்ணாடி பார்ப்பதை
கவனமாய்த் தவிர்ப்பேன்!
விலகாத தாவணியை அடிக்கடி
சரிசெய்வேன் உனக்காக!

ஆடை மாற்றுகையில்
அடிக்கண்ணால் நோக்குகிறாய்...

உன் கண்களின்
அதீத பயம்
நான் அறியாமலில்லை!

இழுத்துக்கட்டிய
தாவணிக்குள்.....
இளமையோடு நான்
இதயத்தையும்
பத்திரப்படுத்துவேன்!

உன் மகளுக்கு
மனசைப் பூட்டும்
மந்திரம் தெரியும்....

இதயம் தழுவும்
காதலை விட
வயிற்றைக் கொள்கிற
பசி பெரிது!!

வேலைக்குப் போகிறேன்!

இதற்குத்தானே
ஆசைப்பட்டாய் அம்மா??