'ஆசை' படத்துக்குப் பிறகு, 'சைக்கோபாத்' வகையறா கதையைத் தேர்ந்தெடுத்து, அதைச் சுவாரஸ்யமாக சத்தம் போடாமல் சொல்ல முயற்சித்திருக்கிறார், இயக்குனர் வஸந்த். தனக்கு ஆண்மையில்லை என்ற உண்மையை மறைத்துவிட்டு, பத்மபிரியாவை மணம் முடிக்கிறார் நிதின் சத்யா. இந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிய வருகிறது. தாம்பத்ய வாழ்க்கையில் சிக்கல் உண்டானதால், இவ்விருவருக்கும் விவாகரத்து ஆகிறது.
பத்மபிரியாவின் நிலையைப் புரிந்துகொண்ட பிருத்விராஜ்,அவரைத் திருமணம் செய்து கொள்கிறார். அமைதியான வாழ்க்கை கிடைத்துவிட்டது என்ற நிம்மதியுடன் இருக்கும் பத்மபிரியாவுக்கு, முதல் கணவர் ரூபத்தில் பிரச்சனை வருகிறது. அந்தப் பிரச்சனைகள் என்னென்ன? அவற்றால் என்ன முடிவு உண்டாகிறது என்பதே மீதிக்கதை.
ஆண்மையை இழந்த நிதின் சத்யாவின் சைக்கோ தனமான நடவடிக்கைகளால், பத்மபிரியா படும் அவஸ்தைகளை 'த்ரில்லர்' பாணி திரைக்கதையாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். அதேநேரத்தில், ஆபாசம் எள்ளளவும் உள்ளே நுழையாமல் பார்த்துக்கொண்டிருப்பது பாராட்டத்தக்கது. பத்மபிரியாவின் அழகில் மட்டுமின்றி, நடிப்பிலும் மெருகு கூடியிருக்கிறது. ஆசை, காதல், தவிப்பு, கோபம், பயம் என பல உணர்வுகளையும் யதார்த்தமாக வெளிக்காட்டி, சத்தமின்றி சதமடித்துள்ளார். அதேபோல், பிருத்விராஜும் நுணுக்கமான பாடி லேங்வேஜ் மூலம் அசத்தியிருப்பது சிறப்பு.
'சைக்கோ' ரக பாத்திரத்துக்கு மிகக் கச்சிதமாக பொருந்தி, நல்ல நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தியிருக்கிறார் நிதின் சத்யா. படத்துக்கு பலம் சேர்த்திருக்கும் இரண்டு முக்கிய அம்சங்கள்... ஒளிப்பதிவும் இசையும். பாடல் காட்சிகளில் கண்களைக் குளிர வைக்கும் கேமரா, 'த்ரில்லர்' காட்சிகளில் விறுவிறுப்பைக் கூட்டுகிறது. 'அழகு குட்டிச் செல்லம், ' பாடலால் தாலாட்ட வைக்கும் யுவன் சங்கர் ராஜா, பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார்.
பத்மபிரியாவைக் கடத்தும் காட்சிகள், ஆறுமாத காலம் தனியறையில் வைப்பது, ரசிகர்களால் யூகிக்க முடிந்தவற்றைக்கூட நாயகனால் யூகிக்கமுடியாதது போன்ற சில லாஜிக் சறுக்கல்களும், 'த்ரில்லர்' திரைக்கதைக்கு உரிய சுவாரஸ்யமான திருப்பங்கள் போதுமனதாக இல்லாதது போன்றவையே படத்துக்கு மைனஸ்!
ஆனால் 'சைக்கோபாத்' வகையறா திரைக்கதையில், குடிப்பழக்கத்தால் உண்டாகும் தீமையை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் சமூக அக்கறையைப் பாராட்டியே ஆகவேண்டும்.மொத்தத்தில், ரசிகர்களை போதுமான அளவுக்கு கட்டிப்போட்டிருக்கிறது 'சத்தம் !

No comments:
Post a Comment