கொக்கி', 'கருப்பசாமி குத்தகைதாரர்', 'தீ நகர்' படங்களைத் தொடர்ந்து கரண் நடிக்கும் படம், 'காத்தவராயன்'.
தப்பான தொழில் செய்கிற அனைவருக்குமே, தாம் செய்யும் தொழிலை நியாயப்படுத்த காரணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட ஒருவனின் கதையைச் சொல்லும் படமே 'காத்தவராயன்' என்கிறது படக்குழு.
'மலையூர் மம்பட்டியான்' போல் மலைக் கிராமங்களின் பின்னணியை கதைக் களமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் கதையைக் கேட்ட கரண், சற்றும் யோசிக்காமல் இதில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். அந்த அளவுக்கு கதை, அழுத்தம் நிறைந்ததாக உள்ளதாம்.
அர்ஜூன் நடித்த 'ஆயுதபூஜை', ஷாருக்கான் நடித்த 'சாம்ராட் அசோகா' படத்தின் தமிழ் பதிப்பு ஆகியவற்றுக்கு வசனம் எழுதிய சலங்கை துரை, இப்படத்தை இயக்குகிறார். கே.பாக்யராஜ், சிராஜ், சிவகுமார் போன்ற இயக்குனர்களிடம் உதவியாளராக பணிபுரிந்த அனுபவம் துரைக்கு உண்டு.
தெலுங்கில் வெள்ளிவிழா கண்ட 'டி' படத்தின் கதாசிரியரும் இவரே. விதிஷா, கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் வடிவேலு, இளவரசு, பெஞ்சமின், 'காதல்' தண்டபாணி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ஒகேனக்கல், மேட்டூர், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
'காத்தவராயன்' படக்குழு:
நடிகர், நடிகையர் : கரண், விதிஷா, வடிவேலு, இளவரசு, பெஞ்சமின், 'காதல்' தண்டபாணி, அம்ஜத்கான் மற்றும் பலர்.
ஒளிப்பதிவு : கார்த்திக் ராஜா
இசை : ஸ்ரீகாந்த் தேவா
பாடல்கள் : பா.விஜய், தாமரை
படத்தொகுப்பு : பீட்டர் பாபியா
கலை : சகு
சண்டைப் பயிற்சி : தளபதி தினேஷ்
நடனம் : சிவசங்கர்
இயக்குனர் : சலங்கை துரை
தயாரிப்பு : வி.ரவிச்சந்திரன், ஆர்.எஸ்.