Friday, December 14, 2007

"பி‌ரிவோ‌ம் ச‌ந்‌தி‌ப்போ‌ம்" - A preview

இல‌க்‌கியமு‌ம் அ‌றி‌விய‌லும் கை கு‌லுக்‌கி‌க் கொ‌ள்ளு‌ம் ஊடக‌ம் ‌திரை‌ப்பட‌‌ம் தா‌ன் "பி‌ரிவோ‌ம் ச‌ந்‌தி‌ப்போ‌ம்"

ந‌ல்ல கதைகளை‌ ம‌‌ட்டுமே கா‌ட்‌சி‌ப்படு‌த்துவேன் எ‌ன்று ‌பிடிவாதமாக இரு‌ப்பவ‌ர் பா‌ர்‌த்‌திப‌ன் கன‌வு த‌ந்த இயக்குந‌ர் கரு. பழ‌‌னிய‌ப்ப‌ன். அவரது இய‌க்க‌த்‌தி‌ல் கதாநாயக‌னாக ஆ‌ட்டோ‌‌கிரா‌ப் த‌ந்த சேரனு‌ம், கதாநாய‌கியாக ‌சினேகாவு‌ம் நடி‌க்‌கி‌ன்றன‌ர்.

சினேகா‌வு‌க்கு ‌திருமணமாவத‌‌ற்கு மூ‌ன்று மாத‌ங்க‌ள் மு‌ன்‌பிரு‌ந்து தொட‌ங்கும் கதை ‌திருமணமா‌கி ஆறு மாத‌ங்க‌ளு‌க்கு‌ப்‌பி‌ன் வரை செ‌ல்‌கிறது. இது தா‌ன் இ‌க்கதை‌யி‌‌ன் பயண தூர‌ம். ஒரு குடு‌‌‌‌ம்ப‌ம் ‌பி‌ரி‌கிறது. ச‌ந்‌தி‌ப்போ‌ம் எ‌ன்று ‌பி‌ரி‌ந்தா‌‌ர்களா, பி‌ரி‌ந்தவ‌ர்க‌ள் ‌மீ‌ண்டு‌ம் ச‌ந்‌தி‌த்தா‌ர்களா எ‌ன்பதை கதை ‌விள‌க்கு‌கிறது‌.

பட‌த்‌‌தி‌ல் இட‌‌ம்பெறு‌ம் பாட‌‌ல்க‌ள் வி‌த்யாசாக‌ர் இசை‌யி‌ல் உருவா‌கியு‌ள்ளது. த‌மி‌‌‌ழ் இலக்கணத்த‌ி‌ல் வரு‌ம் அடு‌க்கு‌த் தொட‌ர், அ‌ந்தா‌‌தி, ச‌ங்‌கீர அ‌ணி, தன‌்மைய‌ணி, உவமையண‌ி ஆ‌கியவ‌‌ற்றை கையா‌ண்டு‌ள்ளது புதுமையான முய‌ற்‌சி ஆகு‌ம்.

பட‌த்‌தி‌ல் ச‌ண்டை‌க்கா‌ட்‌சிகளே இ‌‌ல்லை எ‌ன்பது ஒரு செ‌ய்‌தி. பாட‌ல் கா‌ட்‌சி‌யி‌ல் ஒரு பாட‌ல் த‌‌விர எ‌திலு‌ம் ந‌ட்ச‌த்‌திர‌ங்க‌ள் வாயசை‌க்க‌வி‌ல்லை எ‌ன்பது இ‌ன்னொரு ‌சிற‌‌ப்ப‌‌ம்ச‌ம் ஆகு‌ம். சினேகா‌வி‌ன் ‌சி‌னிமா வா‌ழ்‌க்கை‌யி‌ல் அவரு‌க்கு இ‌ந்த‌ப்பட‌ம‌் ஒரு மை‌‌ல் க‌ல் எ‌ன்று சொ‌ல்லு‌ம் அள‌வி‌ற்கு நடி‌ப்‌பி‌ல் ‌பி‌‌‌ச்சு உத‌றிய‌ிரு‌க்க‌றா‌ராம்.

சேரனு‌ம் தனது இய‌‌ல்பான நடி‌ப்‌‌பி‌ல் இதய‌த்தை வருடி‌யிரு‌க்கிறா‌ராம். காத‌ல் இ‌ல்லாத குடு‌ம்ப பட‌‌த்தை அனைவரு‌ம் கு‌டு‌‌ம்‌ப‌த்துட‌‌ன் கண‌்டுக‌ளி‌க்க பொ‌ங்க‌ல் ‌தின‌த்‌தி‌ல் வெ‌ளிவர இரு‌க்கு‌ம் இ‌ப்பட‌த்‌தி‌ன் இறு‌‌தி‌க்க‌ட்ட வேலைக‌ள் நடைபெ‌ற்று வரு‌கி‌ன்றன.

படக்குழு :

கதை, திரைக்கதை, வசன‌ம், இயக்கம் : கரு. பழ‌னிய‌ப்ப‌ன்

இசை : வி‌த்யாசாக‌ர்

ஒளிப்பதிவு : எ‌ம்.எ‌ஸ்.பிரபு

படத்தொகுப்பு : சரவணா

கலை : ரா‌ஜீவ‌‌ன்

பாடல்கள் : க‌பில‌ன், யுகபார‌தி, ஜெய‌ந்தா‌

தயாரிப்பு : எம‌். சுபா‌ஸ்கர‌ன், ராஜுமகா‌லி‌ங்க‌ம்

No comments: