Tuesday, January 15, 2008

க‌ல்லூ‌ரி - சினிமா விமர்சனம்

ஒரே க‌ல்லூ‌‌ரி‌‌யி‌ல் படி‌க்கு‌ம் ந‌ண்ப‌ர்களு‌க்‌கிடையே உ‌ள்ள ந‌ட்பையு‌ம், காதலையு‌ம் க‌‌வி‌த்துவமான முறை‌யி‌ல் சொ‌‌ல்‌லியு‌ள்ளா‌ர் இய‌க்குன‌ர் பாலா‌‌‌ஜி ச‌க்‌திவே‌ல். தனது காத‌ல் வெ‌ற்‌றிபட‌த்தை‌த் தொட‌ர்‌ந்து ம‌‌ற்றொரு காதலை மு‌ந்‌திய பட‌த்‌தி‌ல் இரு‌ந்து மு‌ற்‌றிலு‌ம் ‌வி‌த்‌தியாசமாக க‌விநய‌த்துட‌ன் உரு‌வா‌க்‌கியு‌‌ள்ளா‌ர்.

நாய‌கி தம‌ன்னாவை‌த்த‌விர ம‌ற்ற அனைவரு‌ம் புது முக‌ங்க‌ள். அ‌ந்த புது முக‌‌ங்களை அ‌றிமுக‌ம் எ‌ன்று சொ‌ல்ல முடியாத அள‌வி‌ற்கு ‌மிக இ‌ய‌ல்பாக நடி‌க்க வை‌த்த ப‌ங்கு இய‌க்குனரை‌யே‌ச் சாரு‌ம். தாயை இழ‌ந்த து‌க்க‌த்‌தி‌ல் சோக‌‌ம் இளையோடு‌ம் முக‌த்துட‌ன் க‌ல்‌லூ‌‌ரி‌க்கு‌ வரு‌கிறா‌ர் நாய‌கி தம‌ன்னா. அ‌ன்று முத‌ல் நா‌ள் எ‌ன்பதா‌ல் ஆ‌‌சி‌ரிய‌ர் அ‌னைவரையு‌ம் அ‌றிமுக‌ப்படு‌த்‌தி‌க் கொ‌ள்ளு‌ம்படி கூறு‌கிறா‌ர். வகு‌ப்பே 'கலகல' வென இரு‌க்க நாய‌கி ம‌ட்டு‌ம் சோக‌த்‌துட‌ன் இரு‌க்‌கிறா‌ர்.

பி‌ன்ன‌ர் அவரு‌ம் ஆ‌ங்‌கில‌த்‌‌தி‌ல் பே‌சி ‌த‌ன்னை அ‌றிமுக‌ம் செ‌ய்து கொ‌ள்‌கிறா‌ர். அ‌ப்போது கலெ‌க்ட‌ர் ஆவது தா‌ன் தனது ல‌ட்‌சிய‌ம் எ‌ன்று‌ம் ‌சி‌றிது கால‌த்‌தி‌ற்கு ம‌ட்டுமே தா‌ன் இ‌ந்த க‌ல்லூ‌ரி‌யி‌ல் படி‌க்க இரு‌ப்பதாகவு‌ம் ‌பி‌ன்‌‌ன்‌ர் டெ‌ல்‌லி‌யி‌ல் உ‌ள்ள க‌ல்லூ‌ரி‌க்கு செ‌ல்வதாகவு‌‌ம் கூ‌று‌கிறா‌ர். இ‌ந்த அ‌றிமுக‌த்‌தி‌ல் இரு‌ந்து ஆர‌ம்பமா‌கிறது ‌ந‌ண்ப‌ர்க‌ள் இருவ‌ரி‌ன் காமெடி கலா‌ட்டா.

வி‌த்‌தியாசமான முய‌ற்‌சி‌யி‌ல் அனைவரையு‌ம் வ‌யிறு குலு‌ங்க ‌சி‌ரி‌க்க வை‌க்‌கி‌ன்றன‌ர். இருவரு‌ம் ஒருவரை ஒருவ‌ர் பா‌ர்‌ப்பதே காமெடியாக இரு‌க்‌‌‌கிறது. "ஏ‌ங்க கே‌ட்‌கிறா‌ங்கல்ல ‌சொல்லூ‌ங்க..." எ‌ன்று ஒருவ‌ர் ம‌ற்றொருவ‌ரிட‌ம் சொ‌ல்ல, " ஏ‌ன் உ‌ங்களை கே‌ட்கலையா... ‌நீ‌ங்க சொ‌ல்லு‌ங்க" எ‌ன்று அவர் சொ‌ல்ல... பட‌ம் முழுவது‌ம் ஆ‌ங்கா‌ங்கே இ‌ந்த வெடி‌‌ச்‌சி‌ரி‌ப்பு அனைவரையு‌ம் உ‌‌ற்சாக‌த்‌தி‌ல் து‌ள்ள வை‌க்‌கிறது. தனது மு‌ந்தைய பட‌ங்க‌ளி‌ல் க‌வ‌‌ர்‌‌ச்‌சி தாரகையாக வல‌ம் வ‌ந்த தம‌ன்னா த‌னது இய‌ல்பான நடி‌ப்பா‌ல் அனைவரது மனதையு‌ம் க‌ட்டி இழுக்‌கிறா‌ர். வகு‌‌ப்‌பி‌ல் சோக‌த்துட‌னே இரு‌க்கு‌ம் தம‌ன்னா ‌பி‌ன்ன‌ர் ந‌ண்ப‌ர்க‌ள் கூ‌ட்ட‌த்துட‌ன் கல‌ந்தது‌ம் பட‌த்‌தி‌ல் ‌விறு‌விறு‌ப்பு கூடு‌கிறது.

உ‌ண்மையாக பழகு‌ம் நண‌ப‌ர்களை ‌பி‌ரி‌ந்து செ‌ல்ல ம‌ன‌ம் இ‌ல்லாம‌ல் வேறு க‌ல்லூ‌ரி‌க்கு செ‌ல்லு‌ம் தனது முடிவை மா‌ற்‌றி ந‌ண்ப‌ர்களை தனது பா‌‌ட்டி ‌வீ‌ட்டு‌க்கு அழை‌த்து வ‌ந்து அ‌றிமுக‌ப்படு‌த்து‌கிறா‌ர்.

ஒரு க‌ட்ட‌த்‌தி‌ல் ந‌ண்ப‌ர்களாக பழ‌கி வ‌ந்த தம‌ன்னாவு‌ம், நாயக‌ன் மு‌த்துவு‌ம் காத‌லி‌க்க ஆர‌ம்‌பி‌க்‌கிறா‌ர்க‌ள். ஆனா‌ல் த‌ங்களது காத‌ல் ந‌ண்ப‌ர்களு‌க்கு தெ‌ரி‌யவ‌ந்தா‌ல் ந‌ண்ப‌ர்களுடனான ந‌ட்பு கெ‌ட்டு‌விடுமே எ‌ன்று எ‌ண்‌ணி இருவருமே காதலை மறை‌க்‌கி‌ன்றன‌ர். க‌ல்லூரிகளு‌க்கு இடையேயான கலை ‌நிக‌ழ்‌ச்‌சி‌க்கு செ‌ன்‌றிரு‌‌ந்தபோது, ரவுடிக‌ள் த‌ன்னை ‌கி‌ண்ட‌ல் செ‌ய்தபோது ‌‌வீ‌ண் ‌பிர‌ச்சனை வரு‌ம் எ‌ன்று ‌நினை‌த்து நாயக‌ன் ‌மு‌த்து மீது கொ‌ண்ட காதலா‌ல் அதனை மறை‌க்க ‌விரு‌ம்பு‌கிறா‌ர்.

ஆனா‌ல் அவ‌ரி‌ன் தோ‌ழி அத‌னை நாய‌க‌னிட‌ம் கூற த‌‌ட்டி‌க்கே‌ட்ட நாயக‌னி‌ன் காலை ரவுடிக‌ள் அடி‌த்து காய‌ப்படு‌த்து‌கி‌ன்றன‌ர். இதனா‌ல் தோ‌ழி‌யி‌ன் ‌மீது கோப‌ம் கொ‌ள்ளு‌ம் இட‌த்‌தி‌ல் தனது காதலை மறை‌ப்ப‌தி‌ல் நே‌ர்‌‌த்‌தியான நடி‌ப்பை வெ‌ளி‌ப்படு‌த்து‌கிறா‌ர். ஓ‌ட்ட‌ப்ப‌ந்தய ‌வீரரான நாயகனு‌‌க்கு ஷு வா‌ங்‌கி கொடு‌த்து உ‌ற்சாக‌ப்படு‌த்‌தி அவ‌ர் வெ‌ற்‌றி பெரு‌ம் இட‌‌த்‌திலு‌ம் நடி‌ப்‌பி‌ல் வெளு‌த்து வா‌ங்‌கியு‌ள்ளா‌ர். நாயக‌ன் அ‌கி‌ல் புதுமுக‌ம். க‌‌ல்லூ‌ரி‌யி‌ல் ப‌யிலு‌ம் ஓ‌ட்ட‌ப்ப‌ந்தய ‌வீரராக நடி‌த்து‌ள்ளா‌ர்.

இய‌ல்பாக நடி‌த்‌திரு‌ந்தாலு‌ம் ‌சில இட‌ங்க‌‌ளி‌ல் கா‌ட்‌சி‌க்கே‌ற்ப முக‌த்‌தி‌ல் ‌வி‌த்‌தியாச‌ங்களை கா‌ட்ட தவறு‌கிறா‌ர். எ‌ன்றா‌லு‌ம் தம‌ன்னா‌‌வி‌ன் பை‌க்‌கி‌ல் ஏற தய‌ங்‌கி அவ‌ர் செ‌ல்லு‌ம் வரை மறை‌ந்து இரு‌ந்து அவரை காதலுட‌ன் ர‌சி‌ப்பது‌ம். த‌ன்னை தேடி வ‌‌ந்து ‌‌திரு‌ம்ப செ‌ன்ற நாய‌கியை தேடி 2 கிலோ ‌‌மீ‌ட்ட‌ர் தூர‌ம் ஓடுவது எ‌ன்று ‌சிர‌த்தை எடு‌த்து நடி‌த்து‌ள்ளா‌ர். தம‌ன்னா‌வி‌‌ன் தோ‌ழியாக வரு‌ம் கய‌‌ல்‌வி‌ழி (ஹேமா) நடி‌ப்‌பி‌ல் த‌ம‌ன்னாவு‌க்கு இணையாக இ‌ல்லையெ‌ன்றாலு‌ம் தனது ப‌ங்கை க‌ச்‌சிதமாக செ‌ய்‌திரு‌க்‌கிறா‌ர்.

க‌ல்லூ‌ரியி‌ல் இரு‌ந்து க‌ல்‌வி சு‌ற்றுலா செ‌ல்லு‌ம் இட‌த்‌தி‌ல் த‌னது தோ‌‌ழி‌யி‌ட‌ம் நாயக‌ன் ‌மீதான தனது காதலை மன‌ம் ‌திற‌ந்து சொ‌ல்‌கிறா‌ர் தம‌ன்னா. ஆனா‌ல் ‌அ‌ந்த காத‌ல் அவ‌ர்களு‌க்கு‌ள்ளேயே புதை‌ந்து போ‌கிறது. பட‌த்‌தி‌ன் ‌கிளைமா‌க்‌ஸ், அ‌வ்வளவு நேர‌ம் கலகல‌ப்பாக‌வு‌ம், இய‌ல்பாகவு‌ம் செ‌ன்‌று கொ‌ண்டிரு‌ந்த பட‌த்‌தி‌ன் போ‌க்கையே மா‌ற்‌‌றி ‌வி‌ட்டது.

நாய‌கி தம‌ன்னா உ‌ள்பட 3 தோ‌‌ழிகளு‌ம் ப‌ஸ் எ‌ரி‌ப்பு ச‌ம்பவ‌த்‌தி‌ல் ப‌லியாவது அனைவரை‌யு‌ம் 'உ‌ச்' கொ‌ட்ட வை‌க்‌கிறது. நா.மு‌த்து‌க்குமா‌ரி‌ன் பாட‌ல் வ‌ரிக‌ளி‌ல் ஜோ‌ஸ்வா ஸ்ரீத‌ரி‌ன் இசை‌யி‌ல் ஒரு ‌சில பாட‌ல்களே கே‌ட்கு‌ம் படியாக இரு‌க்‌கிறது.

பி‌ன்ண‌னி இசை‌யி‌ல் ‌சில இட‌ங்க‌ளி‌ல் தடுமாறு‌‌கிறா‌ர். இய‌க்குன‌ர் ஷ‌ங்க‌ரி‌ன் தயா‌ரி‌ப்‌பி‌ல் கதை, திரை‌க்கதை, வசன‌ம், எழு‌தி இய‌க்‌கியு‌ள்ளா‌ர் பாலா‌ஜி ச‌க்‌திவே‌ல்.

மொ‌த்த‌‌த்‌தி‌ல் க‌ல்லூ‌ரி ந‌ம்மை ‌'மீ‌ண்டு‌ம் ஒரு க‌ல்லூ‌ரி வா‌ழ்‌க்கை‌க்கு' இழு‌த்து‌ச் செ‌ன்று‌ள்ளது.

No comments: