மூட நம்பிக்கைகள் கூடாது என்ற கருத்தை காமெடி கலந்து சொல்ல வந்திருக்கும் படம் இது. ஆனால் அதை காட்சி படுத்தி சொல்வதில் தடுமாறியிருக்கிறார்கள். அம்மா-அப்பா செல்லமான ரமேஷ், தனது பெற்றொரின் விருப்பத்தின்படி திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறார். இந்நிலையில் நண்பன் திருமணத்துக்காக பஸ்சில் செல்லும்போது ஒரு கனவு. ஒரு பெண்ணின் திருமணம் பாதியில் நிற்க, அந்த பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க முன்வருகிறார் ரமேஷ். அவசரமாக தாலி வாங்க செல்லும் நண்பன் கருணாஸ், லாரியில் அடிபட்டு சாகிறார். அந்த பெண்ணும் விரக்தியில் தற்கொலை செய்துகொள்கிறார். இதுதவிர, தனது தந்தை மணிவண்ணன் திடீர் மாரடைப்பு வந்து மரணம் அடைவது போன்று மற்றொரு கனவு. கனவு தெளிந்து, குழப்பத்துடன் கல்யாண வீட்டுக்கு செல்லும் மேலும் ரமேஷுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி. தான் கனவில் கண்ட மல்லிகா கபூரே, கல்யாண வீட்டில் மணமகளின் தோழியாக நிற்கிறார்.
இருவரும் பார்வையை பரிமாறிகொள்ள காதல் மலர்கிறது. இவர்களது காதல் ஜெயித்ததா, ரமேஷ் கண்ட கனவு பலித்ததா என்பதை காமெடி, சென்டிமெண்ட் கலந்து சொல்லி இருக்கிறார்கள்.
அப்பாவியான ரமேஷ் காதலை வெறுக்கும்போதும், பின்னர் பயந்து பயந்து காதலில் விழும்போது நகைச்சுவையில் குலுங்க வைக்கிறார். காதலையும் விட முடியாமல் கனவையும் மறக்க முடியாமல் அவர் தவிப்பது கலகலப்பு. இந்த படத்தின் மூலம் இயல்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார் ரமேஷ். அழகு பதுமையாக வரும் மல்லிகாவோ, தனது வருங்காலம் பற்றிய கனவு காணுகிறார். தனது கனவில் வருவது போலவே இனிமையான வாழ்க்கை அமைய வேண்டும் என்று விரும்புகிறார்.
இந்த படத்தில் மூலம் காமெடியில் ஒரு நிலையான இடத்தை பிடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் கருணாஸ். நண்பன் கண்ட கனவுக்காக இவர் அல்லாடுவது வெடி சிரிப்பு. மணிவண்ணன், சரண்யா உள்ளிட்ட பலரும் தங்களது பாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர். ராஜசேகரன் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளுமை. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.
ஒரு புதிய கதை களத்தை தேர்வு செய்து,கலகலப்பாக படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் ஜி.வி குமார்.
PUNCHLINE: புலி வருது - சிரிப்பு வருது!
Ipdi ellam padam edukka mudiyumaanu :-)

No comments:
Post a Comment