Monday, February 18, 2008

தசாவதாரம்' இசை வெளியீட்டு விழாவில் ஜாக்கிசான்!

கமலஹாசன் 10 வேடங்களில் நடிக்கும் 'தசாவதாரம்' பாடல்கள் வெளியீட்டு விழாவில் ஜாக்கிசான் கலந்துகொள்கிறார். இந்தத் தகவலை, ஹாங்காங் சென்று ஜாக்கியைச் சந்தித்துவிட்டு வந்த தயாரிப்பாளர் ரமேஷ் பாபு உறுதி செய்தார். இவ்விழாவுக்கு அழைப்பு விடுக்க ஹாங்காங் சென்ற ரமேஷ் பாபு, இப்படத்தின் கிளிப்பிங்ஸை ஜாக்கிசானுக்குப் போட்டுக் காண்பித்துள்ளார். அதனைக் கண்டு வியந்த ஜாக்கி, பாடல்கள் வெளியீட்டு விழாவுக்கு வருகைபுரிவதுடன், அன்றைய இரவு பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்து தனது சென்னை வருகையை நண்பர்களிடமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்த தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இரண்டாம் வாரத்தில் இவ்விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார். இந்தி திரைப்பட நட்சத்திரங்களான அமிதாப், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொள்ள ஏற்கெனவே இசைவு தெரிவித்துள்ள நிலையில், விழா தேதி முடிவானதும் உபேந்திரா, சிரஞ்சீவி, மோகன்லால், மம்முட்டி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது. ஜாக்கிசானின் ஆரம்பகால படங்களை இந்தியாவில் வினியோகத்தவர்கள், ஆஸ்கார் ரவிச்சந்திரன் மற்றும் அவரது தம்பியும் தயாரிப்பாளருமான ரமேஷ் பாபு. அப்போதே, இவ்விருவர்களுக்கும் ஜாக்கிக்கும் நல்ல அறிமுகம் இருந்தது குறிப்பிடத்தக்கது

No comments: