Monday, February 18, 2008

Thangam - Tamil Movie Review

'பெரியார்', 'ஒன்பது ரூபாய் நோட்டு' போன்ற பெருமைக்குரிய படங்களை தேர்வு செய்யும் சத்யராஜ் அடிக்கடி சறுக்கும் படவரிசையில் லேட்டஸ்ட் 'தங்கம்'! படத்தின் தலைப்பை போலவே கதையும் ரொம்ப சின்னது. தங்கை கொலைக்கு பழிவாங்குகிறார் அண்ணன்!

ச‌த்யராஜு‌ம், ஜெயஸ்ரீயும் 'பாசமலர்' அண்ணன்- தங்கை. ஜெயஸ்ரீயை வி‌ல்லன் கெடுத்துவிட வழக்கம் போல் அவருக்கே திருமணம் செய்து கொடுக்கிறார் சத்யராஜ். தங்கையின் வாழ்க்கைக்காக வில்லன் செய்த கொலையை ஏற்று சிறைக்கு செல்கிறார். சிறைத் தண்டனை முடித்து வரும் சத்யராஜ், தனது தங்கையை வில்லன் கொலை செய்துவிட்டதை அறிந்து வழக்கம்போல் து‌ர‌த்தி, துரத்தி பழி வாங்குகிறார்.

இவ்வளவு அதர பழசான கதையையும், காட்சி அமைப்புகளையும் எந்த தைரியத்தில் இயக்குனர் தேர்வு செய்தார் என்று தெரியவில்லை. படத்தில் ஒரே ஆறுதல் காலத்தால் அழிக்க முடியாத கவுண்டமணியின் காமெடிதான். அவர் வரும் காட்சிகளாகட்டும், பேசும் வசனமாகட்டும் ஒரே காமெடி மழைதான்! (இந்திரலோகம் செல்லும் அழகப்பன்கள்' கவனிக்க)நா‌ட்டு‌க்கு சுத‌ந்‌திர‌ம் வா‌ங்‌கி‌த் த‌ந்த கா‌ந்‌தி ஒரு ப‌ன்‌‌ச் டயலா‌க் பே‌சி‌யிரு‌ப்பாரா. ஏ‌ம்பா நா‌ட்டை கெடு‌க்‌கி‌றீ‌ங்க' எ‌ன்று கலா‌ய்‌ப்பதாக‌ட்டு‌ம், அ‌ரிவாளுட‌ன் ‌தி‌ரிபவ‌ர்களை‌ பா‌ர்‌த்து 'நீ‌ங்கயெ‌ல்லா‌ம் 'வே‌ல்' பட‌த்துல நடி‌ச்சவ‌ங்களா' என ந‌க்கலடி‌ப்பதாக‌ட்‌டு‌ம், காமெடியில் கலக்குகிறார் கவுண்டர்.

ச‌த்யராஜை‌ பா‌ர்‌த்ததும் காரணமே இல்லாமல் காதல் கொள்ளும் மேகா நாய‌ர், ஓவர் வில்லத்தனம் காட்டும் ச‌ண்முகராஜ‌ன் என எல்லா பாத்திரங்களுமே பல்லாண்டு காலமாக பார்த்து பார்த்து சலித்தவை. ஸ்ரீகா‌ந்‌த் தேவா இசை‌யி‌ல் பாடல்கள் ரொம்ப சுமார். பழைய படங்களே பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு ஒ‌‌ளி‌ப்ப‌திவு. படத்தில் இய‌க்குன‌ர் ‌கி‌ச்சா செய்த ஒரே நல்ல காரியம் கவு‌ண்டம‌ணியை நடிக்க வைத்தது!

Vivek's Punch - 'தங்கம்' - கவரிங்!

No comments: