தமிழ் திரையுலகின் மறக்க முடியாத காமெடி இரட்டையர் கவுண்டமணி-செந்தில் ஜோடி. இவர்களது காமெடி காட்சிகள் இன்றைக்கு பார்த்தாலும் கலகலப்பை ஏற்படுத்தக்கூடியவை. விவேக் மற்றும் வைகைப்புயல் ஆகியோரது புயல் வேக வளர்ச்சியினால் காணாமல் போன இந்த ஜோடி மீண்டும் கோடம்பாக்கத்தில் களமிறங்கியுள்ளது. 'தங்கம்' மூலம் கவுண்டமணியும், 'ஆதிவாசியும் அதிசயபேசியும்' மூலம் செந்திலும் ஏற்கனவே ரீ- என்ட்ரி கொடுத்துவிட்டனர். எனினும், 'இதயத்தின் கதை' என்ற படத்தின் மூலம் இருவரும் மீண்டும் ஜோடி போட்டு காமெடி செய்ய களமிறங்குகின்றனர். வழக்கமான அடி-உதை காமெடிதான் என்றாலும், இவர்களது காமெடியை ரசிக்க இன்றும் காத்திருக்கின்றனர் தமிழ் ரசிகர்கள்!
No comments:
Post a Comment