Wednesday, February 27, 2008

தமிழ் பேசத் தயாராகிறார்கள் 'ஜோதா - அக்பர்'


















வட இந்தியாவில் ஒருபுறம் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டாலும், மறுபுறம் வசூலைக் குவித்துக் கொண்டிருக்கும் 'ஜோதா அக்பர்' திரைப்படம், விரைவில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகவிருக்கிறது.

இந்திய அளவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் வசூலைக் குவித்துக்கொண்டிருக்கும் இப்படம், தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'மோகலே ஆசாம்' படத்தின் தமிழ் டப்பிங்கான 'அனார்கலி' வெளிவரவுள்ள நிலையில், சரித்திரப் படம் என்பதால், ஜோதா அக்பருக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 'யுடிவி'யே தமிழில் வெளியிடுகிறது. இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. யுடிவி கேட்ட தொகையைக் கொடுக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை என்பதே அக்காரணம்.

'ஜோதா அக்பர்' முதல் வாரத்தில் ஆந்திராவில் ரூ.2 கோடியே 40 லட்சமும், கர்நாடகத்தில் ரூ.2 கோடியே 18 லட்சமும் வசூல் செய்துள்ளது. ஆனால், தமிழகம் மற்றும் கேரளாவில் ரூ.82 லட்சம் மட்டுமே வசூலாகியுள்ளது. அதேநேரத்தில், தமிழில் மொழிமாற்றம் செய்தால், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளில் போதிய அளவு வசூல் இருக்கும் என்பது நம்பிக்கை.

தமிழ் ஊடகங்களும் இலவசமாகவே இப்படத்துக்கு விளம்பரம் தரும் வகையில், இப்படத்தால் ஏற்பட்ட சர்ச்சைகளை தொடர்ந்து கட்டுரையாக வெளியிட்டு வருவதும் ஒரு வகையில் சாதகத்தையேக் கொடுத்துள்ளது. ஹிர்த்திக் ரோஷன் - ஐஸ்வர்யா ராய் நடித்த இப்படம், முகலாய மன்னர் அக்பர் மற்றும் இந்து மதத்தைச் சேர்ந்த அவரது மனைவியின் வாழ்க்கையைச் சொல்கிறது. அஷுதோஷ் கோவாரிகர் இயக்கிய இப்படத்தில் வரலாற்று உண்மைகள் திரிக்கப்பட்டதாகக் கூறி, ராஜபுத்திரர்கள் சங்கத்தினர் மற்றும் சில இந்து அமைப்புகளும் இத்திரைப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வட மாநிலங்களில் திரையரங்குகள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.


Hrithik Roshan ... Emperor Jalaluddin Mohammad Akbar
Aishwarya Rai Bachchan ... Jodha
Abir Abrar ... Bakshi Banu Begum
Kulbhushan Kharbanda ... Raja Bharmal
Sonu Sood ... Rajkumar Sujamal
Suhasini Mulay ... Rani Padmaw
ati

No comments: