Wednesday, February 27, 2008

Nenjathai kiLLathae - Tamil Movie Review















மீண்டும் ஒரு 'காதல்கோட்டை' கட்ட நினைத்து, அதில் கோட்டை விட்டிருக்கிறார் அகத்தியன். சிக்கல்களில் தானே வலிய போய் மாட்டி, அதை ஒரு அனுபவமாக எடுத்துக் கொள்கிறார் விக்ராந்த்.

ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் மாட்டிக்கொள்வது, விலைமாதுவை அழைத்து வந்து வீட்டில் தனியாக தூங்கவைப்பது என பல காட்சிகள் சுவாரசியப்படுத்துகின்றன. ஆனால், அதன் பிறகு ஜிவ் என்ற எகிறவேண்டிய திரைக்கதை சுவாராசியமே இல்லாமல் நகர்வதால், ஏதோ டாக்குமெண்டரி படம் பார்க்கும் உணர்வு.

த‌ங்கை‌யி‌ன் காதலை ஆத‌ரி‌க்கு‌ம் போது‌ம், தனது அ‌ப்பா‌வி‌ற்கு வேறொரு குடு‌ம்ப‌ம் இரு‌ப்பதை அ‌றி‌ந்து அனுசரணையாக அணுகு‌ம் போது‌ம் ‌வி‌க்ரா‌ந்‌தி‌ன் கதாபா‌த்‌திர‌ம் சரியாகத்தான் பயணிக்கிறது. ஆனால், பார‌தி‌யி‌ன் காதலை‌ப் புற‌க்க‌ணி‌ப்பது, பின் உருகுவது என பின்னர் தடுமாறுகிறது. ஆவண‌ப்பட இய‌க்குநராக அழகு பதுமையாக வருகிறார் பார‌தி. வி‌க்ரா‌ந்‌த் அவரது காதலை‌ப் புற‌க்க‌ணி‌த்த ‌பின்னர் நடி‌ப்‌பி‌ல் ஸ்கோர் பண்ணுகிறார். வி‌க்ரா‌ந்‌தி‌ன் பே‌ச்சு, நடை, பாவனை அனை‌த்‌திலு‌ம் ‌விஜ‌ய்‌யி‌ன் சாய‌ல். ஏதேனும் ஒரு புதிய பாணியை முயற்சிப்பது வருங்காலத்தில் வாய்ப்பளிக்கும்.

ம‌ணிவ‌ண்ண‌ன், யுகே‌ந்‌திர‌ன், சர‌ண்யா, வி‌க்ரமா‌தி‌த்யா என அனைவரு‌ம் கொடு‌த்த வேலையை குறை‌வி‌ல்லாம‌ல் செ‌ய்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள்.காத‌ல் ப‌ற்‌றிய ‌பக்கம் பக்கமான வசன‌ங்க‌ள், தொ‌ய்வான கா‌ட்‌சிக‌ள், மெதுவாக நகரும் திரைக்கதை போன்றவை டிவி சீரியலே பரவாயில்லை ரகம். காட்சிகளை தத்ரூபமாக பதிவு செய்திருக்கும் ஒ‌ளி‌ப்ப‌திவு மனதை குளிரவைக்கிறது.

காதை சேதப்படுத்தாத ‌பிரே‌ம்‌ஜி‌யி‌ன் இசை ஓ.கே. ரகம். தனது முந்தைய படங்களின் சாயலை இயக்குனர் தவிர்த்திருக்கலாம். 'காதல் கோட்டை' மூலம் திரை‌க்கதை‌க்காக தே‌சிய ‌விருது வா‌ங்‌கிய அக‌த்‌திய‌‌ன், இந்த படத்தில் அதே திரைக்கதையில் விட்டிருக்கிறார் கோட்டை !!

Punchline: நெஞ்சத்தைக் கிள்ளாதே - நெஞ்சத்தைக் கொல்லாதே!!

No comments: