Tuesday, February 12, 2008

DumDum - Imaan


ஏப். 24-ல் இசையமைப்பாளர் இமானுக்கு 'டும் டும்'!

தமிழ் சினிமாவில் பிஸியாக இயங்கும் இசையமைப்பாளர்களின் ஒருவரான் டி.இமானுக்கு, ஏப்ரல் 24-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. சாஃப்ட்வேர் துறையில் பணிபுரியும் மோனிகா ரிச்சர்டு என்பவர்தான் மணப்பெண்.

இந்தத் திருமணம், சென்னை கத்தீட்ரல் ஆலயத்தில் நடக்கவிருக்கிறது.

தனது திருமணம் குறித்து இமான் கூறுகையில், 'இது காதல் திருமணம் அல்ல; பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டதே' என்று தனக்கே உரிய மெல்லிய குரலில் சொல்கிறார்.

'தமிழன்' படம் மூலம் அறிமுகமான இமான், தமிழ் திரையுலகில் இளையராஜா, ரஹ்மான் போன்று தன்னை தனித்துவத்துடன் அடையாளம் காட்ட வேண்டும் என்று முனைப்புடன் இசையமைத்து வருபவர்.

No comments: