Tuesday, February 12, 2008

'யாரடி நீ மோகினி' - முன்னோட்டம்

ஆர்.கே. புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கும் படம் 'யாரடி நீ மோகினி'. இப்படத்தில் முதன் முறையாக தனுசுடன் ஜோடி சேருகிறார் நயன்தாரா.

தெலுங்கில் செல்வராகவன் எழுதி, இயக்கிய 'ஆடவரி மாட்லக்கு அர்த்தவே வேறுலே' படத்தின் தமிழ் ரீ-மேக்தான் இப்படம். இதை செல்வராகவனின் அசிஸ்டெண்ட்டாக பணிபுரிந்த மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்குகிறார்.

வேலை வெட்டி இல்லாத இளைஞனான தனுஷ், சாப்ட்வேர் இன்ஜினியரான நயன்தாராவை காதலிப்பதும், அதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளும், அதை காதலர்கள் எதிர்கொள்வதும்தான் கதை.

இப்படத்தில் முத்துக்குமாரின் பாடல் வரிகளுக்கு இசையமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை மற்றும் வசனம் செல்வராகவன்.தெலுங்கு ரீ-மேக் என்றாலும் தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் தமிழில் காட்சி அமைப்புகள் மாற்றப்பட்டுள்ளதாம்

No comments: