பிரிவோம் சந்திப்போம்' படம் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து உடனடியாக அடுத்த படத்தை ரிலீஸ் பண்ணப்போகிறார் சேரன்.ஜெகன்நாத் இயக்கும் 'ராமன் தேடிய சீதை' படம் முடிந்த கையோடு, அடுத்தடுத்து ஹீரோவாக நடிப்பது என்று மூன்று படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார் சேரன்.இவையெல்லாம் முடிந்த பிறகு, ஆட்டோகிராஃப் இரண்டாம் பாகத்தை எடுக்கிற திட்டத்தில் இருக்கிறார். சேரன் இதுவரை இயக்கிய படங்களைவிட இதன் பட்ஜெட் அதிகமாம். எல்லாத்துக்கும் ஓகே சொல்லி படத்தை தயாரிக்கப்போகிறது ஆட்லேப் குரூப்.இதுதொடர்பான பேச்சுவார்த்தை முடிந்து அட்வான்ஸ் வாங்கிவிட்டார் சேரன். முதல் படத்தில் நடித்த அதே நட்சத்திரங்களோடு புதிதாக சிலரையும் சேர்த்திருக்கிறாராம் சேரன்
No comments:
Post a Comment