ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ரஜினிகாந்தின் 'ரோபோ' படத்தின் பெயர் 'இயந்திரா' என மாற்றப்பட்டுள்ளது.சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே தமிழகத்தில் வரிவிலக்கு கிடைக்கும் என்ற நோக்கத்தில் 'இயந்திரா' என்று மாற்றப்பட்டுள்ளது. அண்மையில் 'சிவாஜி'யின் வெள்ளிவிழாவிலேயே, 'ரோபா'வுக்கு இணையான தமிழ் பெயர் பற்றி யோசிக்கப்பட்டு வருவதாக எழுத்தாளரும், வசனகர்த்தாவுமான சுஜாதா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.அதேநேரத்தில் இந்தி, தெலுங்கு என பிறமொழிகளில் இப்படத்துக்கு 'ரோபோ' என்ற தலைப்பே தொடரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment