மெளனராகம் காலத்தில் பாடல்கள் வாயிலாக பேசப்பட்ட மோகன், மீண்டும் கோலிவுட்டில் தனது இன்னிங்ஸ்சைத் தொடங்கியுள்ளார். 'சுட்ட பழம்' என்ற இப்படத்தில் மோகனுக்கு ஜோடியாக சுபா புஞ்சா நடிக்கிறார். 'பெருசு' படத்தின் இயக்குனர் ஜிகே, தனது பின்டெக்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் இப்படத்தைத் தயாரிக்கிறார். காமெடியுடன் கூடிய த்ரில்லர் வகையறா கதை கொண்ட இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment